Monday, December 3, 2012

புதிய பாதை


இன்னொருவர் பாதையில்

பிறர் ஒருவர் கைபிடித்து

நடக்கும் போதே என் கால்களில் முள்

புதிய பாதை அமைப்பதென்பது சற்று சிரம் தான்போலும்

ஆனாலும் அமைக்கதான் வேண்டும்

எந்த பாதையில் தான் முள் இல்லை.


KALYANA KANNAN.P


Sunday, September 16, 2012

பெண்கள்

பெண்களை அதிகமாக காவியங்களிலும் கவிதைகளிலும் பாடிகொண்டு

இருக்கும் இனம் தானே நம் இனம். ஆனால் நம் சமூகத்தில் பெண்ணாக

இருப்பது வரமா சாபமா? நாம் பெண்களை பெண்களாகதான் நடத்துகிறோமா?

பெண்களை பூ என்று கூறுகிறோம் ஆனால் எனக்கு தெரிந்து இந்த பூக்களை

போல வேறு எந்த பூவும் கசக்கபடுவதில்லை.நாம் அதிகமாக கேலி பொருளாக

கொண்டிறிருப்பது பெண்களைத்தான்.இங்கு எந்த வயதுடையவர்களுக்கும்

பெண் என்பவள் ஒரு போதை பொருள்.இங்கு காதலுக்கு வற்புருத்தபடாத

பெண்கள் இல்லை.பெண்களின் அனைத்துவிதமான செயல்களிலும்

சந்தேகமும் சேர்ந்தே உள்ளது.இங்கு பெண்களுக்கே பெண்கள் கேவலம்

போலும்.பெண்கள் தாங்கள் பெண்கள் என்பதை ஒரு கருவியாக

பயன்படுத்துகிறார்கள்.நானே ஒரு பெண் ? நீ என்ன பொம்பளையா?இந்த இரு

வாக்கியங்களும் ஒரு பெண்ணின் நிலைமையை மிக தெளிவாக காட்டுகிறது.

ஒன்று அவர்கள் அவர்களை பட்றி அவர்கள் கொண்டுள்ள கருத்து

மட்டொன்று அவர்களை பட்றி மட்றவர்கள் கொண்டுள்ள கருத்து.ஆண்

குழைந்தைகளுக்கு ஒரு குறுப்பிட்ட காலம் சுவந்திர காலமாக

உள்ளது.ஆனால் பெண்களுக்கோ அனைத்து பருவத்திலும் சந்தேகமும்

சேர்ந்தே வளர்கிறது.அந்த சந்தேக உணர்விற்கு எச்சரிக்கை என்று வேறு தீனி

போடுவது எதைத்தான் சந்தேகப்படவில்லை பெண் ஆணிடம்

உரையாடும்பொழுது,ஒரு பெண் தன சொந்த அறிவில் வேலையை வாங்கும்

போதும் அது அங்கீ கரிக்கப்படும்பொழுதும்,திருமணத்திற்கு பிறகு அவளின்

வெளியுலக செயல்பாடுகள் அனைத்திலும்.இவர்கள் இதற்க்கெல்லாம்

பழகிவிட்டார்கள்.என்னக்கு இந்த உணர்வில்லை என்று பொய்

சொல்லவில்லை.அந்த எண்ணங்களை கழைய முற்பட்டதின் விளைவுகள்

தான் இந்த எழுத்துகள் .

கல்யாண கண்ணன் .ப

Wednesday, May 2, 2012

காதலின் வெறுமை

ஒரு பெண்ணை காதலிப்பது என்பது ஒரு இனம் புரியாத உணர்ச்சி. அனைவரும் இந்த உணர்ச்சியைஎதேனும் ஒரு வயதில் உணர்கின்றனர். ஏன் இந்த பெண்ணை காதலிக்கிறோம் என்று அறியும் முன்பாக மனதில்பதிந்து விடுகின்றனர். அதன் பின்பு அவன் என்னவாக அகிறான் என்று அவனுக்கு தெரிவதில்லை. உடன் உள்ளவர்களுக்கும் புரிவதில்லை.அனைவரும் காதலின் உணர்ச்சியைஅறிந்துள்ளனர். அனால் காதல் ஏற்றுகொள்ளும்போது ஏற்படும் உணர்ச்சியைபெறகாலம் இடம் அளிப்பதில்லை.

ஒருவனின் 21 வருட வாழ்கை அனுபவத்தை எப்படி ஒரு பெண் மாற்றிவிடுகிறாள். அவனின் ஆளுமைகள் அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிடுகிறாள். காதல் மறுக்கப்படும் பொழுது தன் வாழ்விற்கான வெறுமையை இனம் கண்டுகொல்கிறான். அதன் அர்த்தம் காதலிகளால் மிகவும் சிறப்பாக கற்ப்பிக்கபடுகிறது. அவன் தான் அடையும் வெறுமையை நிரப்ப தன்னை பிற சம்பவங்களில் ஈடுபடுத்திகொல்கிறான். ஆனால் எதுவும் அந்த வெறுமையை நிரப்புவதில்லை. ஏதேனும் ஒரு சிறு வார்த்தை கூட அந்த வெறுமையை திரும்ப செய்கின்றன. அந்த வெறுமை அவனை விட்டுசெல்வதில்லை.

அது அவனுடன் நிழல் போல பயணபட்டுகொன்டு இருகின்றது. சில நேரங்களில் அது அவனைவிட பெரிதாகி நின்று கொண்டு பயமுறுத்துகிறது. சில சமயம் காலின் அடியில் நின்று சிரிக்கின்றது அப்படியும் இல்லையெனில் அவனில் இருந்துகொண்டு அவனை அறிகின்றது. தன் வாழ்வில் காணும் அனைத்தாகவும் அவளை உருவகப்படுத்துகிறான். நினைவுகள் அவனை ஆட்கொள்ளும் போது எதனுள்ளாவது தன்னை புதைத்து கொல்கிறான். அதனில் இருந்து அவன் வெளிப்பட முயற்ச்சிப்பதில்லை.அது அவனுக்கு எதோ ஒரு மகிழ்ச்சியை தருகிறது போலும். மரத்தில் இருந்து பிரியும் இலை மரத்தை சுற்றி கிடப்பதை போல அவனும் அவன் மனமும் அந்த வெறுமையை விட்டு அகல்வதில்லை.அந்த வெறுமைதான் அவனை செயல்படவைக்கிறது. 

கல்யாணகண்ணன்.ப

Thursday, April 26, 2012

இலைகள்

ஒரு இலைக்கும் மரத்திற்கும் என்ன வகையான உறவுமுறை. ஒரு முதிர்ந்த இலை மரத்தில் இருந்து பிரியும் தருணத்தை பார்த்திருக்கிறிர்களா?
கோடை காற்று அதற்கு மகிழ்ச்சியை தருவதில்லை. அது அதனை மரத்திடம் இருந்து தன்னை பிரிக்கும் ஒரு சக்தியாக பார்க்கிறது. இதே காற்று தன்னை எப்பொழுது வருடும் என்பதற்காக ஏங்கிய நாட்களும் உண்டு.

சிறுவர்களின் கையில் இருந்து செல்லும் காத்தாடி போல மரத்தை பட்றிகொண்டு காற்றுடன் நடனமாடின. அனால் இன்று இந்த காற்று தன்னை மரத்திடம் இருந்து பிரித்துவிடுமோ என்று பயம். ஒரு இலையின் பிரிவு பிற இலைகளுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருகாற்றின் போதும் கடல் அலை கண்டு கணவனின் கைகளை பிடிக்கும் மனைவி போல மரத்தினை பட்றிகொல்கின்றன.

மரத்தில் இருந்து பிரியும் ஒவ்வொரு இலையும் அடையும் தத்தளிப்பு என்பது ஒரு எழுத்தாளன் வார்த்தைகளுக்கு அடையும் தத்தளிப்பை போன்றது.ஒவ்வொரு தத்தளிப்பின் போதும் தன்னை முன்னேறி செல்ல முயல்கிறது.எப்படியேனும் மரதின்னுடன் சேரமுற்படுகிறது.கடைசியாக மரத்தின் அடியிலேயே தன்னை புதைத்து கொள்கிறது.அதன் மூலம் மரத்தின் உடனான உறவை பலபடுத்துகிறது.

இதோ மீண்டும் இலைகள் துளிர்விட ஆரம்பித்துள்ளன.இலைகள் என்றைக்கும் புதிது இல்லை.தன்னை திரும்பவும் உயிர்ப்பிக்க செய்துள்ளது.ஆமாம் இந்த இலைகள் அதே இலைகள் தான்.இவைகலும் பச்சையாகத்தான் உள்ளன.

கல்யாண கண்ணன்.ப

Friday, March 16, 2012

மாணவர்கள்

இன்று 14/03/2012 இறவு 8.00 மணி அளவில் கோயம்புத்தூர் தொழில்நுட்ப்ப கல்லூரியல் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுகொண்டனர். மூன்றாம் ஆண்டு மாணவர்களும் நாண்காம் ஆண்டு மாணவர்களும் சண்டையிட்டுகொண்டனர்.தவறு யார் மீது என்பது இதில் பிரச்சனை இல்லை. இரு ஆண்டு மாணவர்களும் நடந்துகொண்ட விதம் மிகவும் வருத்தம்தரகூடியது. உடல் குறைபாடு கொண்ட ஒரு மாணவனை நான்காம் ஆண்டு மாணவர்கள் குறைந்தது 30 மாணவர்கள் தாக்கினார்கள்.குச்சியின் உதவியுடன் நிற்க்ககூடிய ஒரு மாணவனை தொடர்ந்து அடித்தவாறு இருந்தனர். தடுத்த ஒரு சில மூன்றாம் ஆண்டு மாணவர்களையும் நான்காம் ஆண்டு மாணவர்கள் வசைபாடினார்கள். ஆடுகளம் அனைத்து இடங்களிலும் சண்டை இட்டுகொண்டிருந்தனர் . விடுதி காப்பாளர் இதை சற்றும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அதன் வழி சென்ற விடுதி துணை காப்பாளர் அதை கவனத்தில் முற்படவில்லை.சென்னை சட்ட கல்லுரி வளாகத்தில் நடந்ததை நேரில் பார்த்ததை போன்று இருந்தது. பொதுமக்கள் வந்து தடுக்கமுற்பட்டனர்.தகவல் கல்லுரி முதல்வருக்கு அறிவிக்கபட்டது.முதல்வரின் வருகைக்கு முன்பாக அனைத்து மாணவர்களும் பிரிந்துசென்றனர். அடிபட்ட மாணவனும் தான் கபடி விளையாடும்போது அடிபட்டதாக சொல்கிறரன். இதில் ஒரு சில விஷயங்கள் மாறுபடுகிறது. மாணவர்களுக்கு பொது இடத்தில சண்டை போட யார் சொல்லிதந்தது. ஒரு வேகத்தில் ஒருவர் அல்லது இருவர் சுயத்தை இழக்க நேர்ரிடும் ஆனால் இங்கு அனைவரும் தங்கள் சுயத்தை இழந்தது எப்படி. யார் மீது இந்த தவறை கூருவது.குடும்பத்தின் மீதா அல்லது கல்வி நிறுவனத்தின் மீதா அல்லது சக நண்பர்கள் மீதா அல்லது சமுகத்தின் மீதா அல்லது சினிமாவின் மீதா . ஒரு விதத்தில் அனைவரும் இதற்கு காரணம். அடித்தவர்களை விட அதை பார்த்தவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களை குறை சொல்லமுடியாது இவர்களுக்கு சொல்லிக்குடுத்த அனைத்தும் பிறர் வேறு நீ வேறு. என்றும் பிறர் பிரச்சனை மீது ஆர்வம் காட்டதே.அதன் விளைவு தான் பொது இடத்தில் இவ்வாறு நடைபெறுகிறது.ஒன் ஒருத்தனால் என்ன பன்ன முடியும் என்ற கேள்வி வேறு. என்னக்கு ஒன்று மட்டும் புரியவில்லை ஏன் இந்த கேள்வி.அவனால் பொது இடத்தில் ஒருவனை அடிக்க முடியும் என்றால் நம்மால் ஏன் பொது இடத்தில் அதை தடுக்க முடியாது.தவறு புரியும் அவனுக்க அவ்வளவு தைரியம் என்றால் நமக்கு ஏன் பயம். அவன் கையில் ஆயுதம் இல்லை அப்பறம் கூட நமக்கு பயம். "அச்சம் தவிர்" ,"ரௌத்திரம் பழகு" இது அனைத்தும் படிப்பதற்கு மட்டும் இல்லை.மனவர்களுக்கு ஏன் இந்த கோபம். எப்படி இவர்களிடம் அதை அழிப்பது. இப்படி பல கேள்விகள். விடை தெரிந்தால் கூறுங்கள்.

Monday, February 27, 2012

கழுவ மரம்

கடந்த வெள்ளிகிழமை ஈரோடு சென்றிதோம் நண்பரின் அண்ணன் கல்யாணத்திற்காக.அங்கிருந்து வளயகரா தெருவில் உள்ள அய்யனார் கோவிலுக்கு சென்றோம்.கடந்த இரண்டு மதமாக செல்லவேண்டும் என்று எண்ணியது அன்று நடந்தது. என்னுடன் தரணி , தியான் உடன் வந்தனர்.ஒரு மரத்தை காண்பதற்கு நாங்கள் நடந்து சென்றது இன்னும் வியப்பாகவுள்ளது.கழுவ மரம் பழகாலத்தில் தண்டனை அளிக்க பயன்படித்தியது. தற்பொழுது அது ஈரோடில் மட்டும் உள்ளது.


தற்பொழுது அதை கடவுளாக வழிபடுகிறார்கள். இது 800 ஆண்டு பழமையானது. இதன் நடுபகுதி உடைந்துவிட தற்பொழுது அது மாட்றபட்டுள்ளது. இது எந்த மரத்தில் செதுக்கப்பட்டது என்று தெரியவில்லை.பொதுவாக அனைவராலும் பனை மரம் என்று கருதபடுகிறது. இதன் சங்கிலியும் தற்பொழுது மாற்றபட்டுள்ளது. இதற்க்கு எண்ணெய் தடவும்பொழுது சிறிது சாய்வாக தடவினால் காயம் ஏற்படுமென்று கோவிலின் அற்ச்சகர் கூறினார். ச.ராமகிருஷ்ணன் மூலம் தான் இதனை அறிந்துகொண்டோம்.


Tuesday, February 21, 2012

சுவர்

நாலு சுவர்களும் நாலு நண்பர்கள் என்பது இப்பொழுதுதான் புரிகிறது. சுவர்கள் எப்பொழுதும் விசித்திரமானவை.நம்மோடு நாம் பேசமுயலும் போது பெரும்பாலும் நாம் சுவற்றின் துணையாகிகொல்கிறோம்.கேள்வி கேட்பவனாக இருக்கும்போது அது பதில் அளிப்பவனாகவும் பதில் கூரும்போது கேள்வி கேட்பவனாகவும் நம்முடன் அது பேசுகிறது.

நண்பர்களை தாண்டிய பல விஷயங்கள் சுவருடன் பறிமாறபடுகிறது.நாம் பெரும்பாலும் ஒரு தடவையாவது சுவற்றுடன் பேசிகிறோம்.அவைகள் எப்பொழுதும் நம்பிக்கைக்குரிய ஒரு தோழன். நம்முடைய காதல் கவிதைகள் பெரும்பாலும் இவைகள்தான் அறிந்துள்ளன. இவைகள் உரையாடும் பொழுது நம்மை நமேக்கே பிரதிபலிகின்றன. ஆண்களின் கண்ணீரை பெருவாரியான சுவர்கள் தன்னுள் இழத்துகொள்கின்றன. இவைகள் எப்பொழுதும் தாம் அறிந்தவற்றை பிறருக்கு கூர்வதில்லை.சுவர்கள் மனிதனின் அணைத்து முகங்களையும் அறிதுள்ளன.ஆண் பெண் இவ்விருஇனத்தின் மிகபெரும் தோழன் நம்மை நோக்கி எழுப்பட்ட பல கேள்விக்கான பதில்கள் அதனுள்தான் புதையுண்டு உள்ளன.


கல்யாண கண்ணன்