Thursday, April 26, 2012

இலைகள்

ஒரு இலைக்கும் மரத்திற்கும் என்ன வகையான உறவுமுறை. ஒரு முதிர்ந்த இலை மரத்தில் இருந்து பிரியும் தருணத்தை பார்த்திருக்கிறிர்களா?
கோடை காற்று அதற்கு மகிழ்ச்சியை தருவதில்லை. அது அதனை மரத்திடம் இருந்து தன்னை பிரிக்கும் ஒரு சக்தியாக பார்க்கிறது. இதே காற்று தன்னை எப்பொழுது வருடும் என்பதற்காக ஏங்கிய நாட்களும் உண்டு.

சிறுவர்களின் கையில் இருந்து செல்லும் காத்தாடி போல மரத்தை பட்றிகொண்டு காற்றுடன் நடனமாடின. அனால் இன்று இந்த காற்று தன்னை மரத்திடம் இருந்து பிரித்துவிடுமோ என்று பயம். ஒரு இலையின் பிரிவு பிற இலைகளுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருகாற்றின் போதும் கடல் அலை கண்டு கணவனின் கைகளை பிடிக்கும் மனைவி போல மரத்தினை பட்றிகொல்கின்றன.

மரத்தில் இருந்து பிரியும் ஒவ்வொரு இலையும் அடையும் தத்தளிப்பு என்பது ஒரு எழுத்தாளன் வார்த்தைகளுக்கு அடையும் தத்தளிப்பை போன்றது.ஒவ்வொரு தத்தளிப்பின் போதும் தன்னை முன்னேறி செல்ல முயல்கிறது.எப்படியேனும் மரதின்னுடன் சேரமுற்படுகிறது.கடைசியாக மரத்தின் அடியிலேயே தன்னை புதைத்து கொள்கிறது.அதன் மூலம் மரத்தின் உடனான உறவை பலபடுத்துகிறது.

இதோ மீண்டும் இலைகள் துளிர்விட ஆரம்பித்துள்ளன.இலைகள் என்றைக்கும் புதிது இல்லை.தன்னை திரும்பவும் உயிர்ப்பிக்க செய்துள்ளது.ஆமாம் இந்த இலைகள் அதே இலைகள் தான்.இவைகலும் பச்சையாகத்தான் உள்ளன.

கல்யாண கண்ணன்.ப