Wednesday, February 24, 2016

நட்ப்பு வட்டம்

ஒரு சிறுவட்டத்தில் தொடங்கும்
அதை சுற்றி இன்னொரு வட்டம்மிடும்
அதை சுற்றி மற்றொரு பெரியவட்டம்மிடும்
ஒரு வட்டத்தை இன்னொன்ற அனுமதிக்கும்
இரு வட்டம் இணைத்து ஒருவட்டம்மாகும்
எந்த வட்டதில்லும் இல்லாத சிறப்பு
இது உங்களை வெளியேறி செல்லவும் அனுமதிக்கும்

நான் ஒரு ‪google‬ data

எனது தேடல்கள் அவர்கள் அறிந்தது
எனது தனிமையின் இரகசிய தேடல்களும் அவர்கள் அறிந்தது
எனது காமத்தின் கொடூரமும் அவர்கள் அறிந்தது
எனது பரிவர்த்தனைகள் அவர்கள் அறிந்தது
எனது உள்ளாடைகளின் வண்ணமும் அவர்கள் அறிந்தது
எனது தேடல்களின்அடுத்த வார்த்தையை சரியாக
கூறமுடித்த அவர்களால்
இந்த கவிதையின் அடுத்த வார்த்தையை கூறமுடியாது
எனது தூரிகை அதன் அடுத்த கோடுகளை
எங்கே தொடங்கும் என்பதறியாது

களிமண் கடவுள்

அவனை பார்க்கும் அவனின் நண்பர்களால் இதை நம்பமுடியாது. அவள் பின்னால் ஒரு ஏழை வீட்டு தெரு நாயை போல பின்தொடர்ந்து செல்வதை. அவனுக்கும் அந்த குழப்பம் வருவதுண்டு. அவள் எதோ ஒன்றை அவனின் அரைசம்மததில் செய்யசொல்கிறாள் அவனும் அதை ஒரு முழுசம்மதத்தில் ஒப்புகொண்டவனுக்கான நேர்த்தியில் செய்துமுடிக்கிறான் அது அவனக்கு தெரிவதேயில்லை. அவளை மிகசரியாக வர்ணிக்க வேண்டும் என்றால் அவளை நீங்கள் ஒரு கோட்டோவியமாகத்தான் வரையமுடியும். இவனும் மன்மதன் வீட்டு கடைநிலை ஊழியன் அல்ல.அதற்கும் சற்று இல்லை மிகவும் குறைவுதான்.
ஆனால் அவள் ஒரு வடிவானவள்.
எந்த கோணத்திலும் அவளுக்கு என்று ஒரு வடிவுண்டு. அதை மறுப்பதிற்கில்லை.அதில் அவளின் நெத்திக்கும் கழுத்தில் புடைத்து தெரியும் நரம்புக்கும் முக்கிய பங்குண்டு. அவளை அவன் இதுகாரம் சந்திக்கும் பொழுது அவளின் நெற்றியை தான் முதலில் பார்ப்பான். அது அவனில் எதோ ஒரு குறுகுருப்பை ஒரு முழுமையை கொடுத்துவிடுகிறது.
அது அவளுக்கும் தெரியுமா?
அவளுக்கு என்று குரும்பு தனம் உண்டு அது அவளுக்கே உள்ள கலை அது தமிழ் படத்தில் வரும் சித்தபிரம்மை பிடித்த நடிகையை போல் அல்ல. அது ஒரு இயல்பான அதே சமையம் அவளால் மட்டுமே செய்யமுடிந்த அவளுக்கு மட்டுமே கைகூடிய ஒன்று. அதில் எதோ ஒன்றை தனக்காக அவள் சேர்கிறாள் என்பது இவன் எண்ணம். அவளுடன் இருக்கும் அந்த நேரங்களை அவன் ஒரு புகைபடத்தில் அடைக்கபடும் ஒரு நொடியை போல் அடைக்கவிரும்புகிறான்.ஆனால் அது ஒரு தொகுப்பாக ஒரு வீடியோ போல் கூடிகொண்டேபோய்கிறது.
அவன் பெரும்பாலும் அவளை அவளின் வாசனை கொண்டே அறிகிறான். அது ஒரு விஷமுறிவற்ற பாம்பின் கடியை போல அவனுள் ஒரு விரவிகிடக்கிறது. அவன் அவளின் வாசனையை ஓரு நீரை உறிஞ்சும் பஞ்சு போல தன்னுள் இழுத்து கொள்ள முயற்ச்சிக்கிறான். ஒரு மோப்ப நாய் போல்.
அவளுக்கு அதில் விருப்பம் இல்லையெனினும்.
மாறாக அவள் அவனை இருப்பின் மூலம் அறிந்துகொண்டாள். அவன் இல்லாத பொழுதும். அவனின் இருப்பை அவளே உருவாக்கிகொண்டாள். குழந்தையின் களிமண் கடவுள் போல்.
அவள் அதனிடம் எப்பொழுதும் முறையிட்டதில்லை அதில் அவளுக்கு நம்பிகையும்யில்லை. அவளுக்கு இதன் நிதர்சனம் கொஞ்சம் தெரியும் என்பதால்.
அவள் மூன்றாம் நாள் உயிர்தெலுதலுக்கும் இவன் வாசனையின் நுகர்தலுக்கும் காத்துகொண்டுயிருக்கிறார்கள்.

நிலைகுத்திகொண்டு!!!

எனக்கு அவளின் கண்களை கடப்பது தான் மிகவும் சிரமமான காரியமாக உள்ளது. அவளின் கண்களை கடப்பது என்பது ஒரு கோடை விடுமுறையின் கடைசி நாட்களை போன்றது.நிலைகுத்திகொள்கிறேன். அவள் எல்லோரையும் போல மிக சாதரணமாக தான் என்னையும் பார்க்கிறாளா? எப்படியாய் இருந்ததாலும் அது ஏதோ ஒரு கேள்வியை கேட்டுகொண்டே இருக்கிறது. என்னுள் எங்கோ ஒரு ஓரமாய் இருந்த இச்சையை தூண்டி விடப்பட்ட குத்துவிளக்கின் திரியை போல எரியசெய்கிறது.அவள் கண்களுக்கு அந்த ஒய்யாரத்தை அவளின் புருவம்தான் அழிக்கிறது.அதன் நெளிவு அதற்க்கு ஒரு ஓவியதன்மையை அளிக்கிறது.அவளை கடப்பதற்க்கான கடவுசொல்லை அதில்தான் ஒழித்துவைத்திருக்கிறாள். அதுக்கான அந்த கவியதன்மையை அளித்ததில் புருவத்திற்க்கு சற்றும் குறைத்தது அல்ல அவளின் மூக்கு என்பதை அவளை பார்த்த மறுகணமே யாராலும் அறிதியிட்டு சொல்லமுடியும். அது ஒரு நேர்த்தியான மேடுபோல்தான் இருந்தது. மூக்கிற்கும் கண்ணின் கீழ் வலயத்திற்கும் இடையே உள்ள அந்த சதை பற்று அவளின் கண்ணை உள்வாங்காமலும் துருத்திதெரியாமலும் பார்த்துகொண்டது. புருவங்களுக்கு இடையில் உள்ள அந்த சீரான இடைவெளி என்னின் காலவெளியோ?அதை கடப்பது கொஞ்சம் சிரமம் எனினும் கடக்க வேண்டும்மா என்ன? வெறுமனே
கடந்து அந்த பக்கம் செல்வதில் என்ன இருக்கிறது வெறுமையை தவிர.அதற்க்கு இங்கேயே இருந்துவிட்டு போய்கிறேன்.
நிலைகுத்திகொண்டு!!!