Monday, April 21, 2014

ஏதேனும் ஒன்றுபோதும்

கவிதையின் ஒரு வார்த்தை
சிறுகதையின் ஒரு வரி
மிகச்சிரியதொரு மௌனம்
குழந்தையின் சிரிப்பு
இலைகள் உதிரிந்த மரம்
ஆள்அரவம் அற்ற தெரு
புகை,மது என இவைகளில்
ஏதேனும் ஒன்று போதும்
உன் நினைவுகள் என்னை பற்றி எரிய

ப.கல்யாண கண்ணன்

Wednesday, April 16, 2014

பயம்

உன் கணவனிடம் சொல்லிவிடாதே
நான் அவனை காதலிக்கவில்லையென்று
அவனும் என்னை போல புரிந்துகொள்ளாத
ஒருவன் என்று நிருபித்துவிடபோகிறான்

உன் வயது 25 என்றால்
அவன் போன தலைமுறையின்
எச்சமாக இருந்துவிடபோகிறான்

ப.கல்யாண கண்ணன்

Tuesday, April 8, 2014

s.ramakrishnan

s . ராமகிருஷ்ணன் உடன் கதை பேசுவோம் நிகழ்ச்சியில் 


Monday, April 7, 2014

கழிப்பறை

எனக்கு நன்றாக தெரியும் அந்த

கழிப்பறை முதலில் வெண்மையாகதானிருந்தது

முதலில் அப்பாதான் போவார்

புகை நெடி வெளியேறவே பத்து நிமிஷம்

அம்மாவை காலைநேர சமையல்

காலை கடனில் பாக்கிவைத்துவிட்டது

பின்பு அக்கா

இளமைக்கான பரிசோதனையை நான்

அங்கு தான் நடத்தினேன்

இடைஇடையே விருந்தினர்

எப்படியோ மஞ்சள் நிறம் அப்பிகொண்டது

கிருமி நாசினி வெண்மையை

அங்கங்கே மீட்டெடுத்தது

எல்லைகளில் தோற்றேவிட்டது

மஞ்சளின் அடர்த்தி வெளியே வருபவரின்

உதடோரத்தில் தெரிந்தது

பிரச்சனையை மறைத்தாகிவிட்டது

வண்ணமயமான கழிப்பறை கட்டியாச்சு

ப.கல்யாண கண்ணன்'