Friday, September 12, 2014

தற்கொலை

  ரயிலின் முன்பு விழுந்தது தற்கொலை. இந்த தலைப்பே இவனுக்கு போதுமானதாக இருந்தது. இறந்தது ஆணா? பெண்ணா? என்று படிப்பதற்குள் அவனது தற்கொலை சிந்தனை பேருந்தில் பயணம் செய்பவன் விழிப்பது போல சட்டென்று விழித்தது. கடந்த சில நாட்களாகத்தான் தற்கொலை பற்றி ஆழசிந்திக்கிறான். ஓவியத்தை புரிந்தது கொள்ள முயற்சிப்பது போல்.

 இதற்கு முன்பு அவனுக்கு மூன்று முறை தற்கொலை பற்றி தோன்றியது. ஆனால் அவைகள் வாயில் இருந்து வரும் பெரும்பாலான வார்த்தைகளை போல ஒன்று. இன்றுதான் புரிந்தது தற்கொலைக்கு பெரிய காரணங்கள் ஒன்றும் தேவையில்லை சின்ன சின்ன காரணங்களும் நீண்டநேர சிந்தனையும் போதுமென்று. எல்லோருடனும் இருக்கும்பொழுதும் அவன் உணர்ந்த தனிமை தான் தற்கொலை பற்றிய சிந்தனையை உசுப்பியது.
அவனுக்குள் தனிமை மாடு அசைபோடுவது போல அவனது சின்ன சின்ன நிராகரிப்புகளையும் திரும்பெடுத்து அசைபோட்டது. சில நேரங்களில் அவனுக்கு தோன்றும் கடல் அலையில் அடித்துசெல்லபடும் மணல்போலத்தான் இருக்கிறோமோ? என்று. யாருக்கும் தெரிவதில்லை சற்று முன்பு இருந்த மணல் இல்லை இதுயென்று. ஒரு வேலை நமது தற்கொல்லை மதியநேர வெயில் கடல் அலையின் ஈரத்தை உறிஞ்சுவது போல கனநேரத்தில் மறகப்படுமோ? எதுவாயின் என்ன கடல் மணலில் ஈரம் பதிந்துகொண்டுதான் இருக்கும்.

தற்கொலைக்கான காரணம்?

இதுவரை எதுவும்மில்லை.

தற்கொலைக்கான  பொதுவான காரணங்கள் எதுவம் தன்னிடம்மில்லை என்பது தெரியும். தற்கொலைக்கு பின்பு பெரிய காரணங்கள் எதுவாது சொல்லபடலாம். ஆனால் என்னுடைய காரணம் ஊர் நூலகத்தில் மேல் வரிசையில் அடுக்கப்பட்ட நூல்கள் போலதான்.
எப்படி தற்கொலை செய்துகொள்வது?
இதுவே தற்கொலைக்கான ஒரு காரணம் போல்தோன்றியது. தெரிந்த தன் நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் மேலோட்டமாக தற்கொலை பற்றி பேச்சின் இடையிடையே கேட்டான். 

ஒவ்வொருவரின் பதிலிலும் தற்கொலைவாடை வீசியது. 

அதில் ஒருவன் தன் தற்கொலை முயற்சியை முதல்முறையாக விளக்கினான். அவனை பற்றிய தனிமைநேர சிந்தனைகள்தான் அவனை தற்கொலைக்கு தூண்டியதாகவும் ஆனால் அது காதல் தோல்வியின் பொருட்டான முடிவு என கல்லுரி நண்பர்கள் எண்ணியதாகவும் அதை தானும் ஆமோதித்ததையும் நகைச்சுவையாக கூறினான்.

இதை யாரிடமும் சொல்லாதே என்ன

சொல்லமாட்டேன்.

அந்த நேர உணர்வுகளை கேட்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அதற்குள் தான் அவசரப்பட்டு சொல்லிவிட்டோமோ? என்று யோசித்தவாறு சென்றுவிட்டான். அவனுடைய தன்னை பற்றிய சிந்தனை எதுசார்ந்ததாக இருந்திருக்கும். ஒருவேளை அவன் சென்ற பாதையில் தான் நானும் சென்று கொண்டிருக்கிறோனோ? தனிமை என்ற வார்த்தையின் அடர்த்தி அவனுள் பரவியது. தன்னுடைய தனிமையென்பது வெளிச்சத்தில் ஒலிந்திருக்கும் இருளை போன்றது என்று அடிக்கடி தனக்குள்ளே சொல்லிகொள்வான்.
அதற்குள் இரண்டு நாட்கள் கடந்துவிட்டது.
இன்னும் சரியான காரணம் ஒன்றும் அகப்படவில்லை.

முடிவுசெய்தாகிவிட்டது சரியாக நான்குமணிக்கு.

பழமைகளில் அவனுக்கு உள்ள ஈர்ப்பு அவன் தேர்தெடுத்த முறையில் தெரிந்தது. இரண்டு மணிக்குதான் தோன்றியது தற்கொலைக்கு பின்பு தன் முகம் எப்படியிருக்கும்மென. தான் தேர்ந்தெடுத்த முறையில் முகம் அஷ்டகோணலாகும் எனவே முடிந்தளவு மாற்றவேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்துகொண்டான். தூக்கு போடும் பொழுது விந்தணுக்கள் வெளியேறும் என்று கணேஷ் சொன்னது நினைவிற்கு வந்தது. இதுகாரம் வரையில் அது தன் இலக்கை அடையவில்லை என்பதையும் சாவிற்கு பிறகு ஒரு பெண்ணின் கண்ணிலாவது பட்டுவிடுமா? என்று எண்ணிகொண்டான்.

மணி சரியாக மூன்று ஐம்பத்தைந்து, அவன் சற்றும் எதிர்பாராதவிதமாக அடுத்தநாளின் நொடிகளை இன்று எட்டிபிடிக்க நினைக்கும் ஜனதிரல்களுக்கிடையில் கிண்டி பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை அருகே அழுதுகொண்டிருந்த முப்பத்தைந்து வயது பெண்ணின் உருவம் வந்து சென்றது. தற்கொலைக்கு பின்பு அனைவரும் தேடியடைய நினைக்கும் ஒரே விஷயம் கடிதம் ஆனால் இதுவரை கடிதம் எழுதிபழக்கம் இல்லை.
SMS அனுப்பிதான் பழக்கம் எனவே அதன் வடிவில் ஒரு குறுஞ்செய்தி மட்டும் எழுதிவைத்தான்.
இது தற்கொலையில்லை கொலை

அந்த வார்த்தைகளில் எந்த விதமான நடுக்கமும்,அழுத்தமும் காணவில்லை.

ப.கல்யாண கண்ணன்

No comments:

Post a Comment