Saturday, September 27, 2014

நான் பேச நினைப்பதெலாம்



நான் பேச நினைப்பதெலாம்
நாள்:18/02/2014
இடம்:சென்னை

பேராற்றலும் பேரன்பும் கொண்ட இறைவனின் அருளலால்

என்னட இவன் இந்த காலத்திலும் கடிதம் எழுதுறானே என்று நீ என்னலாம். கடிதம் மூலமாவது என் என்னங்கள் அனைத்தையும் கூறி விட முடியாதா  என்றுதான்.
உனக்கான என் கடைசி வார்த்தைகள் சமயல்பாத்திரத்தில் ஒட்டிய எண்ணைய்போல என் மனதில் பிசுபிசுத்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருமுறையும் உன்னிடம் பேசும்பொழுதும் உனக்கான என் வார்த்தைகள் எனக்குள்ளேயே சிதறிவிடுகின்றன. ஒளிசிதறல் போல. உன் மதத்தில் ஆண் பிறமத பெண்ணை காதலித்தால் பிரச்சனையில்லையாம். கணவனின் மதம் தானே பெண்ணிற்கு அதுதானாம். அதுவே பெண் என்றால் அப்படியில்லையாம். எண்ணிக்கை அதிகம் உள்ள என் மதத்தில் நான் ஒருவன் பெரும் பிரச்சனையில்லை. கடல் அலையின்போது கடலினுள் செல்லும் மணலை யார்தான் கவனித்தார்கள்.

“என்னை கல்யாணம் பன்னபோரவருகூட இப்படி நினைப்பாரானு தெரியல “

என்று நீ கூறியது என் காதுகளில் கேட்டுகொண்டேயிறுக்கிறது. நீ எனக்கு ஓர் கருப்பு வெள்ளை புகைப்படம் போல என்பதை எப்படி சொல்லி புரியவைப்பது. நான் உன்னிடம் பேசியவார்தைகள் குறைவு. நீ என்னிடம் மிகக்குறைவு. எனக்கு உன்னை பிடிக்கவில்லை. நீ என்னிடம் அதிகம் பேசிய வார்த்தை. அவைகளை நான் என்றும் கேட்க முற்பட்டதில்லை. நம் மனம் நமக்கு வேண்டிய பதிலைத்தான் பிறரிடம் இருந்தும் எதிர்பார்கிறது. உனக்கும் எனக்குமான பாதை நீண்டது. மிகவும். அது உன் கண்ணுக்கு புலப்படவில்லை. அதில் உன் தவறென்று ஏதும்மில்லை.

“நீ காட்டும் அன்பு புரியாத இடத்தில் நீ ஏன் அன்புகாட்டுகிறாய்”

என்று நீ கேட்டாய். புரியவில்லை.

ஒரு அறிவியல் அறிஞன் தன் காதலியுடனேயே தான் பயனிப்பதாக அவள் இறந்தபின்பும் கருதினானாம். அவளுக்கு பிடித்த ஆடையை பார்த்தபொழுதுதான் அவள் தன்னுடன்யில்லை என்று கதறி அழுதானாம் அதே இடத்தில். ஒருவேளை உனக்கான கண்ணீர் என் கண்ணங்களை நனைக்கும் பொழுதுதான் புரியலாம். நீ என்னை விரும்பவில்லையென்று. இப்பொழுதும் கூறுகிறேன் இதில் உன் தவறென்று ஏதும்மில்லை.

என்னை ஏன் காதலிக்கிறாய்?

தெரியலையே....

விளங்கும்...எதாவது காரணம் இருக்குனு நினெச்சேன் ஆனா அதும்மில்லையா....

உண்மைதான் . எனக்கு இன்னும் தெரியல என்ன காரணம்னு. உன்னிடம் இருந்துதான் வார்த்தைகளின் ஆழம் புரிய ஆரம்பித்தது. உன் வார்த்தைகளின் ஆழத்தில் நான் மயங்கி கிடக்கிறேன். இவைகள் அனைத்தும் அதித கற்பனையாக உனக்கு தெரியலாம். அல்லது காமத்தின் விளைவு என்றுகூட தோன்றலாம். காமம் இல்லாத காதல் உப்பிலாத உணவு போலென்பது அனைவரும் அறிந்தது.

“ இனி போன் பன்னமாட்டேனு சொல்லு

பன்னமாட்டே

சத்தியமா? சத்தியமா....

நீயும் எத்தனவாட்டிதா சத்தியம் பன்னுவ “

எனக்கும் புரியதான் செய்கிறது. விருப்பம்மில்லாத பொண்ணுக்கு போன்பன்றது தவறென்று. என்ன செய்ய நான் உன்னை விரும்புகிறேன் இதை எப்பொழுதும் முழுமையாக நான் உன்னிடம் கூறியதில்லை. இப்பொழுதும் தான். ஒன்றுமட்டும் உண்மை இதில் உன் தவறென்று ஏதும்மில்லை.

“ அறிவில்லையா ..... எத்தனதடவ சொல்றது எனக்கு நிச்சியம் ஆகபோகுது.
எனக்கு உன்னபிடிக்கல புரியுதா....இததான் நானும் மூனுவருசமா சொல்றேன்
புரியுதா... இனிமே போன் பன்ன மரியாத கெட்டுறும். “

நானும் புரியாமல் தான் தெரிந்தேன். நண்பர்கள் உனக்கு நடக்கபோகும் நிச்சயதார்த்த
ஏற்பாடுகளை பற்றி கூறும்வரை.மன்னித்துவிடு....மன்னித்துவிடு.....மன்னித்துவிடு......
எப்பொழுதும் உன் நினைவுகள் வெயில் போல என்னில் எங்கும் பரவிக்கிடக்கிறது.

இப்படிக்கு

முகமது
(உனக்கான என்னுடைய பெயர்)

(உன் முகவரியும், ஐந்துதெரு தள்ளி இருக்கிற உன் வீடும் தெரிந்த எனக்கு இதை தபாலில் அனுப்பவும் விருப்பம்மில்லை. நேரில் தரவும் தோன்றவில்லை).


ப.கல்யாண கண்ணன்

No comments:

Post a Comment