Wednesday, February 24, 2016

களிமண் கடவுள்

அவனை பார்க்கும் அவனின் நண்பர்களால் இதை நம்பமுடியாது. அவள் பின்னால் ஒரு ஏழை வீட்டு தெரு நாயை போல பின்தொடர்ந்து செல்வதை. அவனுக்கும் அந்த குழப்பம் வருவதுண்டு. அவள் எதோ ஒன்றை அவனின் அரைசம்மததில் செய்யசொல்கிறாள் அவனும் அதை ஒரு முழுசம்மதத்தில் ஒப்புகொண்டவனுக்கான நேர்த்தியில் செய்துமுடிக்கிறான் அது அவனக்கு தெரிவதேயில்லை. அவளை மிகசரியாக வர்ணிக்க வேண்டும் என்றால் அவளை நீங்கள் ஒரு கோட்டோவியமாகத்தான் வரையமுடியும். இவனும் மன்மதன் வீட்டு கடைநிலை ஊழியன் அல்ல.அதற்கும் சற்று இல்லை மிகவும் குறைவுதான்.
ஆனால் அவள் ஒரு வடிவானவள்.
எந்த கோணத்திலும் அவளுக்கு என்று ஒரு வடிவுண்டு. அதை மறுப்பதிற்கில்லை.அதில் அவளின் நெத்திக்கும் கழுத்தில் புடைத்து தெரியும் நரம்புக்கும் முக்கிய பங்குண்டு. அவளை அவன் இதுகாரம் சந்திக்கும் பொழுது அவளின் நெற்றியை தான் முதலில் பார்ப்பான். அது அவனில் எதோ ஒரு குறுகுருப்பை ஒரு முழுமையை கொடுத்துவிடுகிறது.
அது அவளுக்கும் தெரியுமா?
அவளுக்கு என்று குரும்பு தனம் உண்டு அது அவளுக்கே உள்ள கலை அது தமிழ் படத்தில் வரும் சித்தபிரம்மை பிடித்த நடிகையை போல் அல்ல. அது ஒரு இயல்பான அதே சமையம் அவளால் மட்டுமே செய்யமுடிந்த அவளுக்கு மட்டுமே கைகூடிய ஒன்று. அதில் எதோ ஒன்றை தனக்காக அவள் சேர்கிறாள் என்பது இவன் எண்ணம். அவளுடன் இருக்கும் அந்த நேரங்களை அவன் ஒரு புகைபடத்தில் அடைக்கபடும் ஒரு நொடியை போல் அடைக்கவிரும்புகிறான்.ஆனால் அது ஒரு தொகுப்பாக ஒரு வீடியோ போல் கூடிகொண்டேபோய்கிறது.
அவன் பெரும்பாலும் அவளை அவளின் வாசனை கொண்டே அறிகிறான். அது ஒரு விஷமுறிவற்ற பாம்பின் கடியை போல அவனுள் ஒரு விரவிகிடக்கிறது. அவன் அவளின் வாசனையை ஓரு நீரை உறிஞ்சும் பஞ்சு போல தன்னுள் இழுத்து கொள்ள முயற்ச்சிக்கிறான். ஒரு மோப்ப நாய் போல்.
அவளுக்கு அதில் விருப்பம் இல்லையெனினும்.
மாறாக அவள் அவனை இருப்பின் மூலம் அறிந்துகொண்டாள். அவன் இல்லாத பொழுதும். அவனின் இருப்பை அவளே உருவாக்கிகொண்டாள். குழந்தையின் களிமண் கடவுள் போல்.
அவள் அதனிடம் எப்பொழுதும் முறையிட்டதில்லை அதில் அவளுக்கு நம்பிகையும்யில்லை. அவளுக்கு இதன் நிதர்சனம் கொஞ்சம் தெரியும் என்பதால்.
அவள் மூன்றாம் நாள் உயிர்தெலுதலுக்கும் இவன் வாசனையின் நுகர்தலுக்கும் காத்துகொண்டுயிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment