Wednesday, February 24, 2016

நிலைகுத்திகொண்டு!!!

எனக்கு அவளின் கண்களை கடப்பது தான் மிகவும் சிரமமான காரியமாக உள்ளது. அவளின் கண்களை கடப்பது என்பது ஒரு கோடை விடுமுறையின் கடைசி நாட்களை போன்றது.நிலைகுத்திகொள்கிறேன். அவள் எல்லோரையும் போல மிக சாதரணமாக தான் என்னையும் பார்க்கிறாளா? எப்படியாய் இருந்ததாலும் அது ஏதோ ஒரு கேள்வியை கேட்டுகொண்டே இருக்கிறது. என்னுள் எங்கோ ஒரு ஓரமாய் இருந்த இச்சையை தூண்டி விடப்பட்ட குத்துவிளக்கின் திரியை போல எரியசெய்கிறது.அவள் கண்களுக்கு அந்த ஒய்யாரத்தை அவளின் புருவம்தான் அழிக்கிறது.அதன் நெளிவு அதற்க்கு ஒரு ஓவியதன்மையை அளிக்கிறது.அவளை கடப்பதற்க்கான கடவுசொல்லை அதில்தான் ஒழித்துவைத்திருக்கிறாள். அதுக்கான அந்த கவியதன்மையை அளித்ததில் புருவத்திற்க்கு சற்றும் குறைத்தது அல்ல அவளின் மூக்கு என்பதை அவளை பார்த்த மறுகணமே யாராலும் அறிதியிட்டு சொல்லமுடியும். அது ஒரு நேர்த்தியான மேடுபோல்தான் இருந்தது. மூக்கிற்கும் கண்ணின் கீழ் வலயத்திற்கும் இடையே உள்ள அந்த சதை பற்று அவளின் கண்ணை உள்வாங்காமலும் துருத்திதெரியாமலும் பார்த்துகொண்டது. புருவங்களுக்கு இடையில் உள்ள அந்த சீரான இடைவெளி என்னின் காலவெளியோ?அதை கடப்பது கொஞ்சம் சிரமம் எனினும் கடக்க வேண்டும்மா என்ன? வெறுமனே
கடந்து அந்த பக்கம் செல்வதில் என்ன இருக்கிறது வெறுமையை தவிர.அதற்க்கு இங்கேயே இருந்துவிட்டு போய்கிறேன்.
நிலைகுத்திகொண்டு!!!

No comments:

Post a Comment