Saturday, October 4, 2014

புறகணிப்பு

நீங்கள் என் கையை இப்பொழுதே விட்டுவிடுங்கள்
உங்கள் கைகளின் பாரம் என்னால் தாங்கமுடியவில்லை
உயரம் சற்று குறைவாகத்தான் உள்ளது.
 
நீங்கள் என் கையை இப்பொழுதே விட்டுவிடுங்கள்
உங்கள் கடைசி விரலின் நுனியில் இருந்து
நான் விழ விரும்பவில்லை.
 
நீங்கள் என் கையை விட்டுவிடுங்கள்
நான் விழும்பொழுதும் உங்கள்  உள்ளங்கையின் வாசனையை
நுகர்ந்து கொண்டேதான் விழுவேன்.

ப.கல்யாண கண்ணன்

No comments:

Post a Comment